திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 155 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :31 மே 2026, 9:28 pm IST

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 155 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

சொதப்பிய டாப் ஆர்டர்; 2-வது முறை சாம்பியன் பட்டம் யாருக்கு?

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகப் பெரிய பலமாக இருந்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சீக்கிரமே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 10 ரன்கள் மற்றும் சாய் சுதர்சன் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஜோஸ் பட்லர் மற்றும் நிஷாந்த் சிந்து ஜோடி சேர்ந்தனர். ஆனால், இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நிஷாந்த் சிங் 18 பந்துகளில் 20 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அர்ஷத் கான் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடங்கும். ராகுல் திவாட்டியா 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். ஜேசன் ஹோல்டர் மற்றும் ரஷித் கான் தலா 7 ரன்கள் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ராசிக் சலாம் தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the final match of the IPL tournament against Royal Challengers Bangalore, Gujarat Titans have scored 155 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.