திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவப்புப் பந்து போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்: அஸ்வின்

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம் | ANI

Updated On :8 மே 2026, 10:14 pm IST

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 15 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், மார்கோ யான்சென் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சில் மிகவும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிரடியாக விளையாடுவது போன்று சிவப்புப் பந்து போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 14 வயதில் விளையாடும்போது வீரர் ஒருவர் தவறுகள் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி எந்த ஒரு தயக்கமும் அழுத்தமுமின்றி சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடுகிறார். அவர் மிகவும் நுணுக்கமாக விளையாடுகிறார். ஆட்டம் குறித்த புரிதல், அழுத்தமான சூழலில் அதிரடியாக விளையாடுவது அவரை மிகவும் அபாயகரமான வீரராக மாற்றியுள்ளது. அவருக்கு அதிக திறமை இருக்கிறது. அவர் சிவப்புப் பந்து போட்டிகளிலும் நிறைய விளையாட வேண்டும் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 404 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian player Ravichandran Ashwin has stated that young player Vaibhav Suryavanshi should play in red-ball matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.