சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வாட்சன், யுவராஜ் சிங் மற்றும் குமார் சங்ககாரா பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
போட்டிகள் அனைத்தும் மும்பை, வதோதரா மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளன. இரண்டாவது சீசனில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கின்றன.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் குறித்து அதன் தலைவர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் சீசன் சிறப்பாக அமைந்தது. முதல் சீசனைப் போன்றே இரண்டாவது சீசனும் ரசிகர்களுக்கு எண்ணற்ற நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறது. ரசிகர்கள் அவர்களது ஹீரோக்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க ஆவலோடு இருக்கின்றனர். இந்த சீசனும் மிகவும் சிறந்த சீசனாக அமையும் என்றார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது டி20 லீக் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The International Masters League cricket series will begin in October.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் திருவிழா!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



