மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் லீக் தொடரின் 17ஆவது போட்டி குறித்து...

News image

பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன்கள். - படம்: ஐபிஎல்

Updated On :11 ஏப்ரல் 2026, 9:52 am

ஐபிஎல் லீக் தொடரின் 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

நியூ சண்டீகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தோல்வியே காணாத பஞ்சாப் அணி மழையின் காரணமாக ஒரு போட்டியில் விளையாடாத நிலை ஏற்பட்டது.

சன்ரைசர்ஸ் அணி 3ல் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் முனைப்பில் அணி வீரர்களை மாற்றி களமிறங்குகிறது.

பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஸ்ரேயாஷ் ஐயர், ஷஷாங் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சென், சேவியர் பார்ட்லெட், வைசாக் விஜய்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், சலில் அரோரா, அனிகேத் வர்மா, நிதீஷ் குமார், ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா.

Summary

Punjab Kings opt to bowl against Sunrisers Hyderabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.