மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஐபிஎல் 2026: சுமாரான பந்துவீச்சாளர்கள் இருந்தும் முதல் அணியாக சாதித்த சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாதனை குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர். - படம்: ஏபி

Updated On :3 ஏப்ரல் 2026, 5:07 am

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் 2026ல் முதல் அணியாக இலக்கை அடையவிடாமல் எதிரணியை வீழ்த்தியுள்ளது. சுமாரான பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்த சாதனை படைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிளாசன் 52, அபிஷேக் 48, டிராவிஸ் ஹெட் 46 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 52 ரன்கள் எடுத்தார்.

இந்த சீசனில் இதுவரை நடந்த 6 போட்டிகளில் இந்தப் போட்டியில்தான் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் புதிய கேப்டன் இஷான் கிஷன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள், இரண்டாவது போட்டியில் மும்பை 6 விக்கெட்டுகள், 3ஆவது போட்டியில் ராஜஸ்தான் 8 விக்கெட்டுகள், 4ஆவது போட்டியில் பஞ்சாப் 3 விக்கெட்டுகள், 5ஆவது போட்டியில் தில்லி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றன.

Summary

Sunrisers hyderabad becomes the first team to defend the total in ipl 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.