மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 216 ரன்கள் எடுத்துள்ளது.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் இஷான் கிஷன் - படம் | AP

Updated On :13 ஏப்ரல் 2026, 4:06 pm

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 216 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் விளையாடியது.

இஷான் கிஷன் அதிரடி; ராஜஸ்தானுக்கு 217 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 0 ரன் மற்றும் டிராவிஸ் ஹெட் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹென்ரிச் கிளாசன் 40 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 28 ரன்களும் எடுத்தனர். சலில் அரோரா 24 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in their IPL match against the Rajasthan Royals, Sunrisers Hyderabad scored 216 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.