ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்தது.
அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 15 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 20 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து முகேஷ் சௌதரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின், அடுத்த பந்திலேயே கேப்டன் இஷான் கிஷனின் விக்கெட்டினையும் வீழ்த்தி அசத்தினார் முகேஷ் சௌதரி. இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின், அனிகேத் வர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்ரிச் கிளாசன் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். கிளாசன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். நிதீஷ் குமார் ரெட்டி 12 ரன்களிலும், சலீல் அரோரா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கிளாசன் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
சிஎஸ்கே தரப்பில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். முகேஷ் சௌதரி இரண்டு விக்கெட்டுகளையும், குர்ஜப்னித் சிங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against Chennai Super Kings, Sunrisers Hyderabad, batting first, scored 194 runs for the loss of 9 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா சிஎஸ்கே? ஹைதராபாதுக்கு 181 ரன்கள் இலக்கு!

டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 166 ரன்கள் இலக்கு!








