ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தோல்வியே காணாத அணி: பாகிஸ்தானை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி குறித்து...

The Australian women's team rejoicing in victory.

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலிய மகளிரணி. - படம்: ஐசிசி

Published On :24 ஜூன் 2026, 2:15 pm IST

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பையில் தோல்வியே காணாத அணியாக ஆஸ்திரேலியா வெற்றியுடன் பயணித்து வருகிறது.

நேற்றிரவு இங்கிலாந்தின் லீட்ஸ் திடலில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதில் 20 ஓவர்களில் ஆஸி. 199/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லீஸ் பெர்ரி 71 ரன்கள் குவித்தார்.

பாகிஸ்தான் சார்பில் சாதியா இக்பால், நஸ்ரா சந்து, ரமீன் ஷமீம் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 13.4 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முனீபா அலி 32 ரன்கள் எடுத்தார். ஆஸி. சார்பில் பந்துவீச்சில் மோலினிக்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், எல்லீஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். எல்லீஸ் பெர்ரி ஆட்ட நாயகி விருது வென்றார்.

இந்த வெற்றியுடன் தோல்வியே காணாத அணியாக 8 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இருந்தும் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யாமல் இருக்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை: குரூப் ஏ புள்ளிப் பட்டியல்

1. ஆஸ்திரேலியா - 8 புள்ளிகள் (4 போட்டிகள்)

2. இந்தியா - 4 புள்ளிகள் (3 போட்டிகள்)

3. தென்னாப்பிரிக்கா - 4 புள்ளிகள் (3 போட்டிகள்)

4. வங்கதேசம் - 4 புள்ளிகள் (3 போட்டிகள்)

5. பாகிஸ்தான் - 0 புள்ளி (4 போட்டிகள்) [வெளியேற்றம்]

6. நெதர்லாந்து - 0 புள்ளி (3 போட்டிகள்) [வெளியேற்றம்]

Summary

Australia beats Pakistan by 113 runs to stay unbeaten at the Women's T20 World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.