ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன்கள் இலக்கு!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

England captain Nat Sciver-Brunt smashing the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விளாசும் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் - படம் | AP

Published On :5 ஜூலை 2026, 9:50 pm IST

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 5) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.

அரைசதம் விளாசிய கேப்டன்; ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளான எமி ஜோன்ஸ் 6 ரன்களிலும், டேனி வியாட் ஹாட்ஜ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து, கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் அலைஸ் கேப்சி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், அலைஸ் கேப்சி 20 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஹீதர் நைட் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

களமிறங்கியது முதலே ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த், லூசி ஹேமில்டன், சோபி மோலினக்ஸ் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the Women's T20 World Cup final, the England team scored 150 runs for the loss of 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.