ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

West Indies captain Hayley Matthews hitting the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஹேலி மேத்யூஸ் - படம் | AP

Published On :30 ஜூன் 2026, 9:19 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று (ஜூன் 30) ஓவலில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹேலி மேத்யூஸ் 28 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டீண்ட்ரா டாட்டின் 26 ரன்கள், ஷெமைன் கேம்பெல் 22 ரன்கள், குயினா ஜோசப் 16 ரன்கள் மற்றும் ஜெனிலியா கிளாஸ்கோ 15 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் சோஃபி மோலினக்ஸ், ஆஷ்லே கார்டனர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அன்னாபெல் சதர்லேண்ட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the T20 World Cup semi-final against Australia, the West Indies scored 125 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.