ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் குவித்த வங்கதேசம்..! மீளுமா ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய வங்கதேசம் குறித்து...

Bangladesh dominated.

ஆதிக்கம் செலுத்திய வங்கதேசம். - படம்: பிசிபி டைகர்ஸ்

Published On :15 ஆகஸ்ட் 2026, 11:31 am IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 426 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

டார்வினில் கடந்த ஆக.13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 101, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 84. மெஹிதி ஹாசன் 65 ரன்கள் குவித்தார்கள்.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தற்போது, ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் 21 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களுக்கு தடுமாறி வருகிறது.

நன்றாக விளையாடி வந்த மார்னஸ் லபுஷேன் 31 ரன்களுக்கு சுழல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜேக் வெதரால்டு டக் அவுட், டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

Summary

Bangladesh bowled out for 426 runs in the first innings! Will Australia bounce back?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.