ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேமரூன் கிரீனுக்கு அதிர்ஷ்டம்: 67 ரன்கள் பின்னிலையில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுற்றது குறித்து...

Cameron Green of Australia makes a run during play on day three of the first cricket test against Bangladesh in Darwin, Australia, Saturday, Aug.15, 2026, (James Ross/AAPImage via AP)

கேமரூன் கிரீன். - படம்: ஏபி

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:47 pm IST

ஆஸ்திரேலியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுற்றது. இதில் ஆஸ்திரேலியா 53 ஓவர்களில் 161/4 ரன்கள் எடுத்துள்ளது.

டார்வினில் கடந்த ஆக.13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 101, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 84. மெஹிதி ஹாசன் 65 ரன்கள் குவித்தார்கள்.

தற்போது, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி வருகிறது. இதில் மூன்றாம் நாள் முடிவில் 53 ஓவர்களில் 161/4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ஹெட் 17, வெதரால்டு 0, லபுஷேன் 31, ஸ்மித் 44 ரன்கள் ஆட்டமிழந்தார்கள். களத்தில் கேமரூன் கிரீன் 43, அலெக்ஸ் கேரி 19 ரன்களுடன் இருந்தார்கள்.

கேமரூன் கிரீனுக்கு பந்து ஸ்டம்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழாமல் பந்து பவுண்டரிக்குச் சென்றது. கிரீனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

இந்த அதிர்ஷ்டம் கேமரூன் கிரீனுக்கு மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கே தேவையானதாக இருக்கிறது. நான்காம் நாள் முழுவதும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தால் மட்டுமே குறைந்தபட்சம் சமன் அல்லது வெற்றிக்கான வாய்ப்பு உருவாகுமென்பது கவனிக்கத்தக்கது.

Summary

Day 3: Stumps - Luck for Cameron Green: Australia trailing by 67 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.