ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேமரூன் கிரீன் சதம், மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகள்: வங்கதேசம் வெற்றிக்கு 57 ரன்கள் இலக்கு!

முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற 57 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா குறித்து...

Cameron Green scores a century; Mehidy Hasan takes 5 wickets.

கேமரூன் கிரீன் சதம், மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகள். - AFP

Published On :16 ஆகஸ்ட் 2026, 10:37 am IST

முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற 57 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது.

கடந்த ஆக.13ல் டார்வினில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் குவித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த இரண்டாவது இனிங்ஸில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதம் அடித்து அசத்தினார். ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வங்கதேசம் சார்பில் மெஹதி ஹாசன் மிராஜ் 5 விக்கெட்டுகளும் ஹாசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

தற்போது 57 என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.