ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய தன்சித் ஹாசன்!

வங்கதேச வீரர் தன்சித் ஹாசன் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...

Tanzid Hasan Tamim  of Bangladesh celebrates scoring a century against Australia during play on day two of the first cricket test in Darwin, Australia, Friday, Aug.14, 2026. (James Ross/AAPImage via AP)

சதம் அடித்த மகிழ்ச்சியில் தன்சித் ஹாசன் தமிம் - ஏபி

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

தன்சித் ஹாசன் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் வங்கதேச வீரராக வரலாற்றச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

டார்வினில் நேற்று (ஆக.13) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் 198 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் முதல் நாளில் 96/1 ரன்களைச் சேர்த்தது. தற்போது, இரண்டாம் நாளில் 86 ஓவர்கள் முடிவில் 312/6 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் 25 வயதான வங்கதேச தொடக்க வீரர் தன்சித் ஹாசன் தமிம் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்த வீரராக தன்சித் ஹாசன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்த சதம்தான் தன்சித் ஹாசன் தமிமுக்கு முதல் டெஸ்ட் சதம் என்பதும் கவனிக்கத்தக்கது. முதல் சதமே வரலாற்றுச் சாதனையாக அமைந்திருக்கிறது.

முன்னதாக, சௌமியா சர்கார் 76 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதே போட்டியில் ஷண்டோ 84 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரண்டாம் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Tanzid Hasan becomes first Bangladesh batter to hit Test century in Australia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.