ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியா - இலங்கை டெஸ்ட்: மழையினால் பாதிப்பு!

இலங்கையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது குறித்து...

Team india at Galle

கே.எல். ராகுல் - தேவ்தத் படிக்கல் - படம்: பிசிசிஐ

Published On :15 ஆகஸ்ட் 2026, 1:32 pm IST

இலங்கை காலே திடலில் நடைபெற்று வரும் இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

போட்டி நடைபெற்று வந்த நிலையில் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கியதால் உணவு இடைவேளை விடப்பட்டது. தற்போது, மழை நின்றாலும் ஆடுகளம் ஈரமாக இருப்பதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கே.எல். ராகுல் 32, தேவ்தத் படிக்கல் 35 ரன்களுடன் விளையாடி வந்தார்கள்.

இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா, நிரோஷன் டிக்வெல்லா இணைந்து ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டி இந்தியாவுக்கு 600ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் வெற்றிக்கான உத்வேகத்தில் இருக்கிறது. இலங்கையில் அடிக்கடி மழை பொழியும் என்பதால் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

Summary

India-Sri Lanka Test: Affected by rain!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.