ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்!

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரை இலவசமாக கண்டு ரசிக்கலாம்....

Free entry for fans during India vs Sri Lanka Test series

சாய் சுதர்சன். - கோப்புப்படம்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 7:42 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலே சர்வதேச திடலிலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி திடலிலும் நடைபெறுகிறது.

இதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் அந்த வாரியம் அழைப்புவிடுத்துள்ளது.

இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பொதுவாக இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வருவார்கள்.

கடந்த காலங்களில் இந்திய அணி விளையாடிய போதுகூட காலியான அரங்குகளிலேயே போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Cricket fans will be allowed free entry during Sri Lanka's upcoming two-Test series against India, starting August 15 in Galle, the country's cricket board announced on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.