ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆகஸ்ட் 15-ல் இந்திய அணியிடம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கும்: கௌதம் கம்பீர்

இலங்கைக்கு எதிரான தொடரின்போது, வெளியிலிருந்து கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்திய அணியிடம் பதில் இருக்கும் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

captain shubman gill with head coach gautam gambhir

கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - படம் | ஐசிசி

Published On :6 ஆகஸ்ட் 2026, 5:24 pm IST

இலங்கைக்கு எதிரான தொடரின்போது, வெளியிலிருந்து கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்திய அணியிடம் பதில் இருக்கும் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதான போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரின்போது, வெளியிலிருந்து கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்திய அணியிடம் பதில் இருக்கும் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களுக்கு முன்பாக என்ன சவால் இருக்கிறது என்பது தெரியும். நாங்கள் எதற்காக விளையாடுகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். அனைத்துத் துறைகளிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது பந்துவீச்சில் ஈடுபட்டாலும், எங்கள் மீது தொடுக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் எங்களிடம் பதில் இருக்கும் என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதன் பின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி முதல் முறையாக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Team Head Coach Gautam Gambhir has stated that the Indian team will have answers to all external questions during the series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.