இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 230-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பலரும் எதிர்பார்த்தது போன்று இந்திய அணியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகப் பெரிய விஷயம் எனவும், என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
Ladies & Gentlemen
— BCCI (@BCCI) June 23, 2026
The moment the nation has been waiting for has arrived!
Vaibhav Sooryavanshi in #TeamIndia jersey. Witness this incredibly special moment â¤ï¸ pic.twitter.com/sUUytFMPVw
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் எந்த காரணத்திற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேனோ அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மிகப் பெரிய விஷயம் நிறைவடைந்துள்ளது. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. என்னுடைய பெயர் பொறித்த இந்திய ஜெர்சியை பார்த்ததும் நடப்பதெல்லாம் கனவு போன்று இருப்பதாக உணர்ந்தேன் என்றார்.
Summary
Young player Vaibhav Suryavanshi has stated that the joy of being selected to play for the Indian team cannot be described in words.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சச்சினின் 37 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா சூர்யவன்ஷி?

சச்சின் சாதனை முறியடிப்பு..! குறைந்த வயதில் இந்திய அணியில் தேர்வான சூர்யவன்ஷி!

உங்களது அதிரடி ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்; சூர்யவன்ஷிக்கு பயிற்சியாளர் புகழாரம்!








