ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சச்சினின் 37 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா சூர்யவன்ஷி?

37 ஆண்டுகால சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சூர்யவன்ஷி? என்பதைப் பற்றி...

News image

சூர்யவன்ஷி - சச்சின் டெண்டுல்கர்.

Updated On :25 ஜூன் 2026, 5:22 pm IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனையை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் வீரர் 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டினார். இரண்டு சதங்கள் விளாசிய அவர் ப்ளே-ஆஃப் சுற்றில் இரண்டு போட்டிகளில் 90 ரன்களுக்கும் மேல் குவித்து அசத்தியிருந்தார்.

சர்வதேச வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் அதிரடியாக விளையாடிய அவர், அதிக ரன்கள் குவித்தவர்கள் 776 ரன்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியையும் வென்றார்.

சமீபத்தில், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரின் இறுதிப்போட்டியிலும், 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்திருந்தார். இவர், டி20 தொடர்களுக்கான தேசிய அணியிலும் இடம்பிடித்துள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானால், இந்திய அணியில் மிக இளம்வயதில் அறிமுகமான வீரர் என்ற சச்சினின் 37 ஆண்டுகால சாதனையை முறியடித்த பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1989 நவ., 15 ஆம் தேதி கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான போது அவருக்கு வயது 16 வயது 205 நாள்கள்.

சூர்யவன்ஷி, நாளை (ஜூன் 26) அயர்லாந்து அணியுடன் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றால், அவர் 15 ஆண்டுகள் 91 நாள்களுடன் சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்துவார் என ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.

Summary

June 26 is set to be the day that Vaibhav Suryavanshi plays his first game for India. The 1st T20I between vs Ireland in Belfast is expected to be the 15-year-old's entry into the senior format.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.