ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார்.

Vaibhav Suryavanshi elated after smashing a half-century.

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Published On :23 ஜூலை 2026, 7:28 pm IST

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம்!

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதமாகும்.

அதிரடியாக விளையாடிய அவர் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.

இருப்பினும், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் அரைசதம் விளாசி இந்தத் தொடரை சிறப்பாகத் தொடங்கியுள்ளார்.

Summary

Young player Vaibhav Suryavanshi has recorded his maiden half-century in international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.