தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்திய அணியில் விராட் கோலிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறவிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து...

News image

ருதுராஜ் கெய்க்வாட் - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 5:18 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகிய விராட் கோலிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஜூன் 13ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

தற்போது, விராட் கோலி இல்லாத நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருதுராஜ் கெய்க்வார் 8 ஒருநாள் போட்டிகளில் 228 ரன்கள் எடுத்துள்ளார். 99 லிஸ்ட் ஏ போட்டிகளில் 5060 ரன்கள் குவித்துள்ளார்.

விராட் கோலி 311 போட்டிகளில் 14, 797 ரன்கள் குவித்துள்ளார். இதில் 54 சதங்கள், 77 அரைசதங்கள் அடித்துள்ளார். 347 லிஸ்ட் ஏ போட்டிகளில் 16,447 ரன்கள் குவித்துள்ளார்.

Summary

Ruturaj Gaikwad to replace Virat Kohli in the Indian team for afghanistan ODI series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.