கோப்பைகளை வெல்வது எப்போதும் மிகப் பெரிய ஊக்கமளிப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாதில் நேற்று (மே 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், கோப்பைகளை வெல்வது எப்போதும் மிகப் பெரிய ஊக்கமளிப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் கோப்பைகளை வெல்வது எப்போதும் எனக்கு மிகப் பெரிய ஊக்கமளிக்கும் விஷயமாக உள்ளது. ஏனெனில், சாம்பியன் பட்டம் வெல்வதைப் போன்று வேறு எந்த உணர்வும் இருக்க முடியாது. தனிப்பட்ட வீரராக சிறப்பாக செயல்படுவது, அணி வெற்றி பெறுவதைக் காட்டிலும் சாம்பியன் பட்டம் வெல்வது உண்மையில் மிகவும் சிறப்பான விஷயம்.
என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் எப்போதும் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதை மனதுக்குள் நினைப்பேன். சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் அங்கம் வகிப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. 11 ஆண்டுகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளது உண்மையில் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது என்றார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது மூன்று முறை, தற்போது தொடர்ச்சியாக ஆர்சிபி அணிக்காக இரண்டு முறை என மொத்தம் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியில் க்ருணால் பாண்டியா அங்கம் வகித்துள்ளார்.
Summary
Royal Challengers Bangalore all-rounder Krunal Pandya has stated that winning trophies is always a huge morale booster.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா

ஆர்சிபியின் சிறப்பான பேட்டிங்குக்கு யார் காரணம்? மனம் திறந்த க்ருணால் பாண்டியா!

பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




