/

2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2026, 1:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராய்பூரில் இன்று (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்‌ஷர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.