டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் இல்லை!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :7 பிப்ரவரி 2026, 1:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 7) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ஜஸ்பிரித் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) , அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.