டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

20-ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்ற சிக்கந்தர் ராஸா!

ஜிம்பாப்வே கேப்டன் டி20 போட்டிகளில் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image
சிக்கந்தர் ராஸா- படம்: ஐசிசி
Updated On :20 பிப்ரவரி 2026, 7:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 20ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

இதுவரை அதிகமான முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்களில் இரண்டாமிடத்தில் உள்ள சிக்கந்தர் ராஸா தனது சாதனையை மேலும் நீட்டித்துள்ளார்.

ஜிம்பாப்வே டி20 அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தலைமையில் அந்த அணி இந்த டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தியுள்ளது.

லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற ஜிம்பாப்வே அணி குரூப் 1 பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணி இருக்கின்றன.

கடைசியாக இலங்கையுடன் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் சிக்கந்தர் ராஸா 45 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்

1. விரந்தீப் சிங் - 22 (மலேசியா)

2. சிக்கந்தர் ராஸா - 20 (ஜிம்பாப்வே)

3. சூர்யகுமார் யாதவ் - 17 (இந்தியா)

4. விராட் கோலி - 16 (இந்தியா)

5. சமி சோஹலி - 14 (மலாவி)

summary

Zimbabwe captain Sikandar Raza has won the Man of the Match award for the 20th time in T20 International cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.