டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உலகக் கோப்பையின் 2 போட்டிகளிலும் ஆட்ட நாயகன்..! 100 விக்கெட்டுகள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்!

டி20 உலகக் கோப்பையில் அசத்தும் ஜிம்பாப்வே அணியின் வேகப் பந்துவீச்சாளர் குறித்து...

News image
ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முஜரபானி.- படங்கள்: எக்ஸ் / ஜிம்பாப்வே கிரிக்கெட்.
Updated On :13 பிப்ரவரி 2026, 2:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஜரபானி (29 வயது) இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

203 சென்டிமீட்டர் உயரமுள்ள முஜரபானி ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 169/2 ரன்கள் எடுத்தது. அடுத்து, ஆஸி. 146க்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பிளெஸ்ஸிங் முஜரபானி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இவர்தான் முதல் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மூன்று வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கு 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

ஜிம்பாப்வே அணிக்காக டி20யில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

111- ரிச்சார்டு கரவரா

103 - சிக்கந்தர் ராஸா

100- பிளெஸ்சிங் முஜரபானி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.