டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆட்ட நாயகன் விருதை பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த ஆப்கன் வீரர்!

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆப்கானிஸ்தான் வீரர் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து...

News image
ஆட்ட நாயகன் விருதை பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த ஆப்கன் வீரர்.- படம்: ஐசிசி
Updated On :21 பிப்ரவரி 2026, 12:39 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆப்கானிஸ்தான் வீரர் இப்ரஹிம் ஸத்ரான் அந்த விருதினை தனது அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் என்பவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்தப் போட்டியுடன் ஜானதன் ட்ராட் பயிற்சியாளர் பதவிக் காலம் முடிந்து விலகுவதும் குறிப்பிடத்தக்கது.

கனடா அணி டாஸ் வென்று பந்துவீச, ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 200/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கனடா அணி 20 ஓவர்களில் 118/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் 95* ரன்கள் எடுத்த இப்ரஹிம் ஸத்ரான் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். விருது வென்ற பிறகு அவர் பேசியிருப்பதாவது:

நான் இந்தப் போட்டியை மிகவும் ரசித்தேன். முதல் 2 இன்னிங்ஸில் நான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆனால், மீதமுள்ள 2 போட்டிகளில் வலுவாக திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இன்று எனது நாள் - எனது திறமையை, என்னை நம்பி விளையாடினேன்.

எங்களுடன் அவருக்கு இன்று கடைசி நாள்

அழுத்தமான சூழ்நிலைகளில் விளையாடுவது பிடிக்கும். நேர்மறையாக களத்தில் இருந்து, ஸ்டிரைக்கை ரொடேட் செய்தும், தவறான பந்துகளை பவுண்டரிக்கு அடித்தும் எனது பேட்டிங் நண்பருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன்.

இந்த ஆட்ட நாயகன் விருதை எனது பயிற்சியாளர் ஜோனதன் டிராட்டிற்கு சமர்ப்பிக்கிறேன். அவரிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டுள்ளேன். என்னை மட்டுமல்ல, எங்களது அணியை உற்சாகப்படுத்தி ஆதரவு அளித்துள்ளார்.

அவரது ஆலோசனையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐசிசி தொடர்களிலும் நிறைய சாதித்து இருக்கிறோம். எங்களுடன் அவருக்கு இன்று கடைசி நாள். அவரை நாங்கள் மிகவும் மிஸ் செய்வோம். அவருடைய வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்றார்.

summary

Afghanistan's Ibrahim Zadran, who won the Man of the Match award, presented the award to his team's coach Jonathan Drat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.