சமனில் முடிந்த சூப்பர் ஓவர்..! எகிறும் சுவாரசியம்!
டி20 உலகக் கோப்பையின் 13-ஆவது ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிந்தது பற்றி...


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக 84 ரன்கள் குவித்தார்.
டி20 உலகக் கோப்பையின் 13ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கன் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தெ,ஆ. அணி 20 ஓவர்கள் முடிவில் 187/6 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக ரிக்கல்டன் 61, டி காக் 59 ரன்கள் குவித்தார்கள்.
அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சூப்பர் ஓவர் சென்றது எப்படி?
மிகவும் சுவாரசியமாக சென்ற இந்தப் போட்டியில், கடைசியில் ஆப்கன் அணியினர் சிறப்பாக விளையாடினார்கள்.
15 ஓவர்கள் முடிவில் 139/ 5 ரன்கள் எடுத்திருந்த ஆப்கன் அணி 16-ஆவது ஓவரில் 1 விக்கெட், 18-ஆவது ஓவரில் 1 விக்கெட், 19-ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகள், 20-ஆவது ஓவரில் 1 விக்கெட் விழுந்து அதிர்ச்சி அளித்தனர்.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையான நிலையில் ரபாடா முதல் பந்து, நான்காவது பந்தில் நோ பால் வீசி சொதப்பினார். இருந்தும் அணியை தோல்வியிலிருந்து ஃபீல்டர்கள் காப்பாற்றினார்கள்.
நான்காவது பந்தினை மீண்டும் வீசும்போது, ஆப்கன் வீரர்கள் 2 ரன்கள் ஓடும்போது ரன் அவுட் ஆகியதால் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.
ஆப்கன் அணியின் நூர் அகமது சிறப்பான சிக்ஸர்களை விளாசினார்.
சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது
முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி சூப்பர் ஓவரில் (6 பந்துகள்) 17 ரன்கள் எடுத்தது.
லுங்கி இங்கிடி வீசிய சூப்பர் ஓவரில் ஆப்கன் அணியினர் எடுத்த ரன்கள் விவரங்கள்: 4,6,1,1,4,1.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் 17 ரன்கள் எடுத்து சமனில் முடிந்தது.
ஃபசல்ஹாக் ஃபரூக்கி வீசிய சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணியினர் எடுத்த ரன்கள் விவரங்கள்: 1, 6, விக்கெட் (பிரெவிஸ்), 4, 0, 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...