டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக 2 சூப்பர் ஓவர்கள்..! தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!

டி20 உலகக் கோப்பையின் 13-ஆவது ஆட்டம் குறித்து...

News image
தென்னாப்பிரிக்க அணியினர். - படம்: ஏபி
Updated On :11 பிப்ரவரி 2026, 10:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 13-ஆவது ஆட்டத்தில் இரண்டாவது சூப்பரில் தெ.ஆ. அணி அசத்தலாக வென்றது.

டாஸ் வென்ற ஆப்கன் பந்துவீச, முதலில் விளையாடிய தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 187/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆப்கன் அணி 19.4 ஓவர்களில் 187-க்கு ஆல் அவுட்டானது.

ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்ல, முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 17 ரன்கள் எடுத்தது. அடுத்து சூப்பர் ஓவரில் விளையாடிய தெ.ஆ. அணி 17/1 ரன்கள் எடுத்து ஆட்டத்தைச் சமன்படுத்தியது.

இந்தக் காரணத்தினால், போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்குச் சென்றது.

முதல் சூப்பர் ஓவரில் நடந்தது என்ன?

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி சூப்பர் ஓவரில் (6 பந்துகள்) 17 ரன்கள் எடுத்தது.

லுங்கி இங்கிடி வீசிய சூப்பர் ஓவரில் ஆப்கன் அணியினர் எடுத்த ரன்கள் விவரங்கள்: 4,6,1,1,4,1.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் 17 ரன்கள் எடுத்து சமனில் முடிந்தது.

ஃபசல்ஹாக் ஃபரூக்கி வீசிய சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணியினர் எடுத்த ரன்கள் விவரங்கள்: 1, 6, விக்கெட் (பிரெவிஸ்), 4, 0, 6.

2-ஆவது சூப்பர் ஓவரில் நடந்தது என்ன?

முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி சூப்பர் ஓவரில் (6 பந்துகள்) 23 ரன்கள் எடுத்தது.

அஜமதுல்லா ஓமர்சாய் வீசிய சூப்பர் ஓவரில் தெ.ஆ. அணியினர் எடுத்த ரன்கள் விவரங்கள்: 6, 1, 2, 6, 6, 2.

அடுத்து விளையாடிய ஆப்கன் அணி சூப்பர் ஓவரில் 19/2 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

மஹாராஜ் வீசிய சூப்பர் ஓவரில் ஆப்கன் அணியினர் எடுத்த ரன்கள் விவரங்கள்: 0, விக்கெட் (நபி), 6, 6, 6, விக்கெட் (குர்பாஸ்).

summary

South Africa won the second super over in a stunning manner in the 13th match of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.