டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சூப்பர் 8-ல் ஓர் இறுதிப் போட்டி! இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்!

சூப்பர் 8 சுற்றில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் குறித்து...

News image
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட போஸ்டர். - படம்: எக்ஸ் / ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் 8 சுற்றில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை (பிப்.22) இரவு மோதுகின்றன.

நரேந்திர மோடி திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியுற்றது.

மீண்டும் இரு அணிகளும் இந்த டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றிலேயே மோதுகின்றன.

இந்தியாவின் பேட்டர்கள் தென்னாப்பிரிக்காவின் பேட்டர்களை விட சிறிது அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார்கள்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இரு அணி வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டை ஒப்பிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

அந்தப் போஸ்டரில் இருப்பது...

தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, இஷான் கிஷனின் ஸ்டிரைக் ரேட்டுகள், (192.4, 212.2) தெ.ஆ. அணியின் தொடக்க வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டை (167.8, 154.9) விட அதிகமாக இருக்கிறது.

அதேபோல நம்.3, 4, 5, 6 வரிசை பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட்டிலும் இந்திய அணியினர் கூடுதலாக இருக்கிறார்கள்.

பேட்டிங்கில் மட்டுமல்லாமலும் பந்துவீச்சிலும் இந்திய அணியினர் தென்னாப்பிரிக்காவை விட நன்றாகவே இருக்கிறார்கள்.

இருப்பினும் இரு அணியுமே லீக் சுற்றில் தலா 4 போட்டிகளிலும் வென்று சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சரவெடியாக இருக்குமென ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளது.

summary

A final match in the Super 8s! India - South Africa clash! Heavy aerial traffic expected this Sunday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.