டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆப்கன் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி..! நியூசிலாந்து சாதனை வெற்றி!

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் அபார வெற்றி குறித்து...

News image
நியூசிலாந்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆப்கன் கேப்டன் ரஷித் கான். - படம்: ஏபி
Updated On :8 பிப்ரவரி 2026, 9:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி தனது அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் 4-ஆவது போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக, குல்பதீன் 63 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய, நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 183/5 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கன் சார்பில் முஜீப் 2, ரஷித், நபி, ஓமர்சாய் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

நியூசிலாந்து அணியில் டிம் சைஃபர்ட் 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதுவரை 176 ரன்களுக்கு அதிகமாக எடுத்து தோல்வியே காணாத ஆப்கானிஸ்தான் முதல்முறையாக தோல்வியுற்றுள்ளது.

இதுமட்டுமில்லாமல், டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி தனது அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து வீரர் டிம் சைஃப்ர்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து 2 (+1.162 ) புள்ளிகளுடன் குரூப் டியில் முதலிடத்தில் இருக்கிறது.

summary

An end to Afghan dominance! New Zealand achieves a historic victory in T20 world cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.