டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அபார வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியது நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் அபார வெற்றி குறித்து...

News image
அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் க்ளென் பிலிப்ஸ். - படம்: ஐசிசி
Updated On :17 பிப்ரவரி 2026, 10:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

கனடாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலமாக, நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 173/4 ரன்கள் செய்தது. இந்த அணியில் யுவ்ராஜ் சம்ரா 110 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 176/2 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.

இந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 59, க்ளென் பிலிப்ஸ் 76 ரன்கள் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் க்ளென் பிலிப்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

summary

New Zealand have booked their place in the Super Eights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.