/

80 நாடுகளில் ஹிந்தி மொழி வர்ணனையில் ஒளிபரப்பாகும் டி20 உலகக் கோப்பை!

டி20 உலகக் கோப்பையில் ஹிந்தி மொழிக்கான முக்கியத்துவம் அதிகரிப்பு குறித்து...

News image
டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டன்கள். - படம்: ஐசிசி
Updated On :7 பிப்ரவரி 2026, 10:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் ஹிந்தி மொழி 80 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுமென ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் முதல்முறையாக முறை ஹிந்தி, உருது, நேபாளி மொழிகளில் இந்தப் போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் இன்று முதல் மார்ச் 8ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தப் போட்டிகளை ரசிகர்கள் நேரலையில் அவர்களுக்குப் பிடித்தமான மொழிகளில் கண்டு களிக்கலாம்.

இந்தியாவில் ஜியோ ஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலமாகவும் டிஜிட்டலில் ஜியோ ஹாட்ஸ்டார் மூலமாகவும் ஒளிபரப்புகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 8 உள்ளூர் மொழிகளில் வர்ணனைகள் செய்யப்படுகின்றன.

பாகிஸ்தான் நாட்டு போட்டிகளை உருது மொழி வர்ணனைகளில் ரசிகர்கள் பார்க்கலாம். பாகிஸ்தானில் பிடிவி, மைகோ தொலைக்காட்சிகளிலும் டிஜிட்டலில் தமாஷா, ஏஆர்ஒய் ஜிஆப், டப்மாட் செயலிலும் பார்க்கலாம்.

80 நாடுகளில் ஹிந்தி வர்ணனை

சுமார் 80 நாடுகளில் ஹிந்தி மொழி வர்ணனை ஒளிபரப்பாகும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அனைத்து இந்திய போட்டிகளும், அரையிறுதி, இறுதிப் போட்டிகளையும் பிரைம் விடியோவில் ஹிந்தியில் காணலாம்.

நியூசிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் ஹிந்தி மொழி வர்ணனையில் காணலாம்.

ஐரோப்பாவில் இந்தியாவின் போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளையும் ஹிந்தியில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் காணலாம்.

வட அமெரிக்காவில் வில்லோ டிவியில் அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து போட்டிகளையும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் காணலாம்.

நேபாளத்தில் கன்டிபுர் டிவியில் ஹிந்தியிலும் நேபாளி மொழியில் சில போட்டிகளையும் காணலாம்.

summary

The ICC Men’s T20 World Cup will be the most accessible cricket tournament ever, with commentary available in a variety of languages across global territories.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.