டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பை: மே.இ.தீ. அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து பந்துவீச்சு!

டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டி குறித்து...

News image
மே.இ.தீ., ஸ்காட்லாந்து அணியின் கேப்டன்கள்.- படம்: ஐசிசி
Updated On :7 பிப்ரவரி 2026, 9:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டாஸில் தோல்வியுற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

குரூப் சி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஸ்காட்லாந்து அணியும் அதனதன் முதல் போட்டியில் மோதுகின்றன.

டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

முதல் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

முன்னாள் சாம்பியன்களான மே.இ.தீ. அணியை ஸ்காட்லாந்து அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்றிரவு இந்தியாவும் அமெரிக்காவும் மூன்றாவது போட்டியில் மோதுகின்றன

ஸ்காட்லாந்து: ஜியார்ஜ் முன்சே, மேத்திவ் கிராஸ், பிரண்டன் மெக்முல்லன், மைக்கேல் ஜோன்ஸ், டாம் ப்ரூஸ், ரிச்சி பெர்ரிங்டன், மைக்கேல் லீஸ்க், ஆலிவர் டேவிட்சன், மார்க் வாட், பிராட் கர்ரீ, சஃப்யான் ஷரீஃப்.

மேற்கிந்தியத் தீவுகள்: பிரண்டன் கிங், ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோமன் பவல், ஷெர்ஃபானே ரூதர்போர்டு, ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹொசைன், மேத்திவ் போர்ட், குடகேஷ் மோட்டி, ஷமேர் ஜோசப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.