டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடைசி லீக் போட்டியில் இந்தியா பேட்டிங்: அணியில் 2 மாற்றங்கள்!

டி20 உலகக் கோப்பையின் 36-ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி குறித்து...

News image
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். - படம்: ஏபி
Updated On :18 பிப்ரவரி 2026, 1:34 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 36-ஆவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் கடைசி போட்டியாக நெதர்லாந்தும் இந்தியாவும் மோதுகின்றன.

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகிவிட்டது. பாகிஸ்தானும் தேர்வாகியதால், இந்தப் போட்டியில் இந்தியா தோற்றாலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.

மாறாக, நெதர்லாந்து அணி மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளதால், இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் யாதவ் பதிலாக அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேலுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

நெதர்லாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.