டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு!

டி20 உலகக் கோப்பையின் 15-ஆவது போட்டி குறித்து...

News image
ஹாரி புரூக், ஷாய் ஹோப். - படம்: ஏபி
Updated On :11 பிப்ரவரி 2026, 1:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 15-ஆவது போட்டியில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனும் பந்துவீச விரும்பினாலும் டாஸில் தோற்றதால் பேட்டிங்கில் நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறியுள்ளார்.

2024க்குப் பிறகு, இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் வெல்ல, மே.இ.தீ. அணியோ ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது.

summary

England bowling against West Indies in T20 world cup at wankade stadium.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.