/

ஐஎஸ்பிஎல்: முதல்முறையாக கோப்பை வென்ற சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ்!

நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி கோப்பை வென்றது குறித்து...

News image
ஐஎஸ்பிஎல் கோப்பையுடன் சென்னை சிங்கம்ஸ் அணியினர். - படம்: இன்ஸ்டா / ஐஎஸ்பிஎல்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி ஐஎஸ்பிஎல் லீக்கில் முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியுள்ளது.

இறுதிப் போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐஎஸ்பிஎல் (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) போட்டிகள் கடந்த 2024 முதல் நடைபெற்று வருகின்றன.

ஐஎஸ்பிஎல் மூன்றாவது சீசனின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிங்கம்ஸ் அணி நிரண்யிக்கப்பட்ட 10 ஓவர்களில் 103/7 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேதன் மத்ரே 30 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா 10 ஓவர்களில் 74/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை சிங்கம்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்முறையாக கோப்பையை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.