/

டி20 உலகக் கோப்பை 2026-ல் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரொமாரியோ ஷெப்பர்ட்!

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரின் அசத்தல் பந்துவீச்சு குறித்து...

News image
ரொமாரியோ ஷெப்பர்ட்.- படம்: ஐசிசி
Updated On :7 பிப்ரவரி 2026, 1:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

முதல்முறையாக இந்த டி20 உலகக் கோப்பை 2026-ல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 182/5 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து பேட்டிங் விளையாடியபோது ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய போட்டியின் 16ஆவது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் விழுந்தது.

மொத்தமாக இந்த ஒரு ஓவரில் நான்கு விக்கெட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து வீரர்கள் மேத்திவ் கிராஸ், மைக்கேல் லீஸ்க், ஆலிவர் டேவிட்சன், சஃப்யான் ஷரீஃப் ஆகியோர் இந்த ஓவரில் ஆட்டமிழந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.