/

டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகும் 5 நட்சத்திர இளம் வீரர்கள்!

டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகும் இளம் ஐந்து வீரர்கள் குறித்து...

News image
ஜேக்கப் பெத்தேல், திலக் வர்மா, கூப்பர் கன்னோலி, டெவால்டு பிரெவிஸ். - படங்கள்: ஐசிசி
Updated On :7 பிப்ரவரி 2026, 11:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகும் இளம் ஐந்து வீரர்கள் குறித்து ஐசிசி தனது வலைதளத்தில் குறிப்புகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் திலக் வர்மா, தென்னாப்பிரிக்காவின் டெவால்டு பிரெவிஸ், இங்கிலாந்தின் ஜேக்கப் பெதல், ஆப்கானிஸ்தானின் செடிக்குல்லா அடல், ஆஸ்திரேலியாவின் கூப்பர் கன்னோலி ஆகியோர் அசத்துவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

திலக் வர்மா (இந்தியா)

இந்திய வீரர் திலக் வர்மா (23 வயது) ஐசிசி டி20 தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்திய அணிக்காக நம்.3 இடத்தில் களமிறங்கும் இவர் சரியான ஃபார்மில் இருக்கிறார்.

40 டி20 போட்டிகளில் 1,220 ரன்கள் எடுத்துள்ளார். 144 ஸ்டிரைக் ரேட், 48.8 சராசரி உடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டங்களிலும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி 80 ரன்கள் குவித்திருந்தார்.

ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து)

இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல் (23 வயது) முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார்.

சிட்னியில் முதல் சதமடித்த இவர் இங்கிலாந்தின் முக்கியமான வீரராக உருமாறியுள்ளார்.

21 டி20 போட்டிகளில் 150க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

பட்லர், பிலிப் சால்ட் உடன் இவரும் டாப் ஆர்டர் பேட்டராக விளையாடுகிறார்.

டெவால்ட் பிரெவிஸ் (தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ் (22 வயது) மிடில் ஆர்டர் பேட்டராக இருக்கிறார்.

21 டி20 போட்டிகளில் 171.32 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடுகிறார். உலக அளவில் மிகவும் சிறந்த பேட்டராக உருவெடுக்கும் திறமை கொண்டவராக இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்தாண்டு 56 பந்துகளில் 125* ரன்கள் குவித்து அசத்தினார்.

செடிக்குல்லா அடல் (ஆப்கானிஸ்தான்)

ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் செடிக்குல்லா அடல் (24 வயது) டாப் ஆர்டர் பேட்டராக இருக்கிறார்.

கடந்த டி20 உலகக் கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்தவர் ஓர் ஆட்டத்திலும் ஆடவில்லை. தற்போதைய டி20 உலக்க கோப்பையில் முக்கியமான வீரராக இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவிருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடினார். கடந்தமுறை அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கன் அணிக்கு இவர் முக்கியமான வீரராக இருக்கிறார்.

கூப்பர் கன்னோலி (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியாவின் கூப்பர் கன்னோலி (22 வயது) சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கிறார்.

சுழல் பந்தில் அசத்தும் இவர் பேட்டிங்கும் செய்யவார். பிபிஎல் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தடுமாறிய இவர் மீது கிரிக்கெட் ஆஸ்திரேலியா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த ஐந்து இளம் வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.