ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

Steve Smith catches the ball with one hand.

ஒற்றைக் கையில் பந்தைப் பிடிக்கும் ஸ்டீவ் ஸ்மித். - படம்: இன்ஸ்டா / கிரிக்கெட்.காம்.ஏயு.

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:24 pm IST

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறைவான போட்டிகளில் அதிக கேட்ச்சுகளுடன் உலக சாதனை படைத்துள்ளார்.

டார்வினில் நேற்று (ஆக.13) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் 198 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் முதல் நாளில் 96/1 ரன்களைச் சேர்த்தது. தற்போது, இரண்டாம் நாளில் 91 ஓவர்கள் முடிவில் 322/6 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார். தற்போது, ஃபீல்டிங்கிலும் அசத்தி வருகிறார். இந்தப் போட்டியில் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ, முஷ்பிஃகுர் ரஹீம், லிட்டன் தாஸ் ஆகியோரின் விக்கெட்டிகளை ஃபீல்டிங்கில் எடுத்து அசத்தியுள்ளார்.

இந்த 3 கேட்ச் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 124 போட்டிகளில் 218 கேட்ச்சுகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, ஜோ ரூட் 166 போட்டிகளில் 218 கேட்ச்சுகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்

1. ஸ்டீவ் ஸ்மித் - 218 கேட்ச்சுகள் (124 போட்டிகளில்)

2. ஜோ ரூட் - 218 கேட்ச்சுகள் (166 போட்டிகளில்)

3. ராகுல் திராவிட் - 210 கேட்ச்சுகள் (164 போட்டிகளில்)

4. மகேல ஜெயவர்தனே - 205 கேட்ச்சுகள் (149 போட்டிகளில்)

5. ஜேக் காலிஸ் - 200 கேட்ச்சுகள் (166 போட்டிகளில்)

Summary

Steve Smith breaking world record in Test Cricket as most catches as Fielder

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.