ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களில் ஆட்டமிழப்பு..! தடுமாறும் ஆஸ்திரேலியா!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறும் ஆஸ்திரேலியா குறித்து...

Steve Smith of Australia rests at the tea break during play on day three of the first cricket test in Darwin, Australia, Saturday, Aug.15, 2026, (James Ross/AAPImage via AP)

ஸ்டீவ் ஸ்மித் - படம்: ஏபி

Published On :15 ஆகஸ்ட் 2026, 1:16 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியா தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது.

டார்வினில் கடந்த ஆக.13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 101, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 84. மெஹிதி ஹாசன் 65 ரன்கள் குவித்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், 47 ஓவர்களில் 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேமரூன் கிரீன் 35, அலெக்ஸ் கேரி 11 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் எதிர்பாராத விதமாக சுழல்பந்தில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் ஸ்மித் அதிகபட்சமாக 71 ரன்கள் அடித்திருந்தார். இந்த இன்னிங்ஸிலும் அவர்தான் அதிகபட்ச ரன் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Key player Steve Smith dismissed for 44 runs... Australia struggling continue at Darwin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.