ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓய்வுக்குப் பிறகு... வர்ணனையாளராக களமிறங்கும் ரஹானே!

சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரஹானேவின் அடுத்த பணி குறித்து...

Ajinkya Rahane

அஜிங்க்யா ரஹானே - (கோப்புப் படம்)

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:27 pm IST

இந்தியாவின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

தற்போது, இந்தியா - இலங்கை மோதும் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஆக.15, இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆக.28ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில், ரஹானேவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஹானே (37 வயது) 85 டெஸ்ட்டில் 5,077 ரன்கள் குவித்துள்ளார். ஆஸி.க்கு எதிரான 2020-21 வெற்றியில் முக்கிய பங்களிப்பு அளித்துள்ளார். வெளிநாட்டு தொடர்களில் வென்றதுக்கு இவரது பேட்டிங் பலமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் வர்ணனையாளராக ரஹானே சேர்ந்துள்ளார். காலேவின் தொடங்கும் முதல் போட்டியில் இவர் வர்ணனையாளராக செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய டெஸ்ட் போட்டிக்கான வர்ணனையை சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லைவ் தொலைக்காட்சியில் இந்தியா - இலங்கை தொடரில் தொடங்குவது ஆர்வத்தை தூண்டுகிறது.

கிரிக்கெட்டில் டெஸ்ட்தான் மிகவும் உன்னதமானது. இந்தியாவை பிரதிநிதித்துவம்படுத்தி பல ஆண்டுகள் விளையாடியுள்ளேன். தற்போது புதிய கோணத்தில் விளையாட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் சலுகைப் பெற்றவனாக உணர்கிறேன்.

என்னுடைய அனுபவத்தையும் போட்டியின் நுணுக்கத்தையும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கவும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். களத்தில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்க உதவுவேன் என்றார்.

Summary

Rahane to make Test commentary debut during India-Sri Lanka series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.