ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இலங்கை அணிக்கு எதிராக கவனமாக விளையாடுங்கள்; பேட்டர்களுக்கு ரஹானே அறிவுரை!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் கவனமாக விளையாட வேண்டும் என அஜிங்க்யா ரஹானே அறிவுரை வழங்கியுள்ளார்.

Indian team players

இந்திய அணி வீரர்கள் - படம் | AP

Published On :7 ஆகஸ்ட் 2026, 8:34 pm IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் கவனமாக விளையாட வேண்டும் என அஜிங்க்யா ரஹானே அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே இரண்டு அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் பேட்டர்கள் கவனமாக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கை ஆடுகளங்கள் முதல் நாள் விளையாடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்டர்கள் நன்றாக விளையாடுவது மிகவும் முக்கியம். இலங்கைக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடியதிலிருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான். பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நீண்ட நேரம் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.

இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உதவிகரமாக இருக்கும். இலங்கை அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசுவார்கள். பேட்டர்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டியிருக்கும். எந்த ஒரு அணியையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம் என்றார்.

இந்திய அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, அந்தத் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரஹானேவும் இடம்பெற்றிருந்தார். அவர் அந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 200 ரன்களுக்கும் அதிகமாக எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Ajinkya Rahane has advised the Indian team's batters to play cautiously in the Test series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.