சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சிஎஸ்கே சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.
நூர் அகமது சிறப்பாக செயல்பட காரணம் எம்.எஸ். தோனி என பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியுள்ளார்
சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 192/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 160/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நூர் அகமது 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 21 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். சிஎஸ்கேவின் துணை பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தப் பிட்ச் இன்று அவருக்கு உதவியது நல்லது. அவருக்கு இங்கு சிறிது சலிப்பு இருந்திருக்கும். மற்ற பிட்ச்கள் எல்லாம் மிகவும் தட்டையாக இருக்கும். இன்று நூர் அகமது சிறிது மெதுவாக காற்றில் வீசினார். பந்து நன்றாக சுழன்றது. அதில் அவர் பயிற்சி செய்துள்ளார்.
பயிற்சியின்போது எம்.எஸ். தோனி அவரிடம் நீண்ட நேரம் உரையாடினார். அவரை லெக் பிரேக் பந்துவீச அறிவுறுத்தினார். அது இன்று நன்றாகவே திடலில் தெரிந்தது.
எப்போதுமே அதிரடியாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் டிஃபென்சிவாக செல்லவே கூடாது. அப்படிச் சென்றால் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
அகீல் ஹொசைன்தான் நூரிடம் சென்று இந்த இடத்தில் பந்துவீச வேண்டுமெனக் கூறினார். இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது என்றார்.
Summary
Dhoni hand in Noor's match-winning spell gainst KKR
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைபவ் சூர்யவன்ஷியின் தாரக மந்திரம் என்ன? ஆட்ட நாயகன் விருதுக்குப் பிறகு பேட்டி!

சிஎஸ்கே சுழல்பந்து இரட்டையர்களின் மேஜிக்..! அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனை மாற்றுவார்களா?

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



