சிஎஸ்கேவின் ’சுழல்பந்து இரட்டையர்கள்’ என அகீல் ஹொசைன், நூர் அகமது அழைக்கப்படுகிறார்கள். நேற்றிரவு வான்கடேவில் நடந்த போட்டியில் இவர்கள் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இந்த சீசனில் அகீல் ஹொசைன் விளையாடிய போட்டிகளில் எல்லாமே சிஎஸ்கே வென்றுள்ளது. அவர் விளையாடும்போது நூர் அகமது பந்துவீச்சும் மிகவும் மேம்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதனால்தான், இவர்களை ’சுழல்பந்து இரட்டையர்கள்’ என வர்ணனையாளர்கள் பாராட்டுகிறார்கள்.
நூர் அகமது விக்கெட் வீழ்த்தியதும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கொண்டாடுகிறார். இதற்கு மாஸ்க் செலிஃபிரேஷன் என்கிறார்கள். இந்தப் போட்டியில் நூர் அகமதும் அவருடன் சேர்ந்து இந்தமாதிரி கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இது குறித்து இருவரும் போட்டிக்குப் பிறகு பேசியிருப்பதாவது:
அகீல் ஹொசைன் - முதல் விக்கெட்டை வேகமான பந்தாக வீசித்தான் எடுத்தேன். எந்த வகையான லைன், லெந்தில் பந்துவீச வேண்டுமென நான் அறிந்ததை நூர் அகமதுக்குச் சொல்லுவேன். நல்லபடியாக நாங்கள் இருவரும் நன்றாக பந்துவீசினோம்.
இரண்டு மிகப்பெரிய அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி. மும்பையில் இந்த மாதிரி விளையாடியதற்கு பெருமைப்படுகிறேன். மாஸ்க் செலிஃபிரேஷனை இருவரும் செய்தது நன்றாக இருந்தது.
நூர் அகமது - அகீல் சொன்னதுபோல நாங்கள் இருவரும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வோம். இருவருக்கும் பந்துவீச்சில் நல்ல பார்ட்னர்ஷிப் இருக்கிறது. ஒருபக்கம் ரன்கள் வழங்காமல் வீசியதால்தான் எனக்கு விக்கெட் கிடைத்தது. அதனால், இவருக்குதான் பாராட்டுகள். என்னை விட எனது கொண்டாட்டம் உனக்கு நன்றாக இருக்கிறது என்றார்.
Summary
Spin twins Akeal Hosein and Noor Ahmad on their famous mask celebration and bowling brilliance in tandem
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மாவுக்காக விளையாடிய மகன்..! சிஎஸ்கே பகிர்ந்த முகேஷ் சௌதரிக்கான பதிவு!

சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்; மும்பையை வீழ்த்தியது சென்னை

ஐபிஎல் தொடரிலிருந்து கலீல் அகமது விலகல்..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

நூர் அகமதுடன் நீண்ட நேரம் உரையாடிய தோனி..! ரகசியம் பகிர்ந்த பயிற்சியாளர்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


