திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிஎஸ்கே சுழல்பந்து இரட்டையர்களின் மேஜிக்..! அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனை மாற்றுவார்களா?

சிஎஸ்கே அணியின் சுழல்பந்து இரட்டையர்கள் குறித்து...

News image

அகீல் ஹொசைன் - நூர் அகமது. - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.

Updated On :6 மே 2026, 3:39 pm IST

சிஎஸ்கே அணியின் சுழல்பந்து இரட்டையர்கள் (ஸ்பின் ட்வின்) அகீல் ஹொசைன் - நூர் அகமது தில்லிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார்கள்.

அருண் ஜேட்லி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 155/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 17.3 ஓவர்களில் 159/2 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே சார்பில் பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 19 ரன்கள் 1 விக்கெட் எடுத்தார். நூர் அகமது 3 ஓவர்களில் 22 ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அகீல் ஹொசைன் விளையாடும் போட்டிகளில் எல்லாம் நூர் அகமது சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். இதுவரை 5 போட்டிகளில் அகீல் ஹொசைன் இருந்தபோது நூர் அகமது 9 விக்கெட்டுகளும் அகீல் இல்லாதபோது 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே வெல்லும் போட்டிகளில் அகீல் ஹொசைன் இருந்துள்ளதால் அடுத்த போட்டியில் இதே பிளேயிங் லெவன் இருக்குமா அல்லது மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லக்னௌ அணிக்கு எதிராக மே.10ஆம் தேதி சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி விளையாடவிருக்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் பிளேயிங் லெவனை மாற்றி குழப்பிவரும் சிஎஸ்கே அணி இனிமேலாவது அந்தத் தவறைச் செய்யாமல் இருக்குமா என்ற சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தபட்சம் மூன்றிலாவது வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The Magic of CSK's Spin Duo! Will They Change the Playing XI for the Next Match?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.