மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

லக்னௌ வீரர் முகுல் சௌதரியின் கிரிக்கெட் பயணம் குறித்து...

News image

முகுல் சௌதரி. - படம்: எக்ஸ் / லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:21 pm

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகுல் சௌதரியின் கிரிக்கெட் பயணம் பலரையும் வியக்க வைக்கதக்கதாக இருக்கிறது.

ஈடர்ன் கார்டன் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது

இந்தப் போட்டியில் 16 ஓவர்களில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் ஆனதும் போட்டி முடிந்துவிட்டதென பலரும் நினைத்தார்கள். ஆனால், இளம் வீரர் முகுல் சௌதரி 27 பந்துகளில் 54 ரன்களை அடித்து நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

முகுல் சௌதரியின் தந்தை தலிப் குமார் சௌதரி தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

நான் 2003ல் டிகிரி முடித்தேன். அந்த ஆண்டே திருமணம் நடந்தது. எனக்கு மகன் பிறக்க வேண்டுமென ஆசை. அதுவும் நடந்தது. அவனை கிரிக்கெட்டராக்க வேண்டுமென விரும்பினேன்.

முகுலை கிரிக்கெட் பயிற்சி பயிற்சியில் சேர்த்தபோதுதான் என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லை எனப் புரிந்தது. அதனால், எனது வீட்டை விற்று, ரூ.21 லட்சம் பெற்றேன். அடுத்த ஆண்டு, ஒரு ஹோட்டலை தொடங்கி மற்றுமொரு கடனை வாங்கினேன். ஆனால், என்னால் எனது மாதத் தவணையைச் சரியான நேரத்தில் கட்ட முடியவில்லை. அதற்காக, நான் சிறைக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால், எந்தத் தவறும் செய்யவில்லை.

எனது உறவினர்கள் என்னை கைவிட்டார்கள். அவர்களை என்னை பைத்தியக்காரன் எனக் கூறினார்கள். ‘நீ உனது வாழ்க்கை மட்டுமல்லாமல், உனது மகன் வாழ்க்கையையும் அழிக்கிறாய்’ என்றார்கள். தற்போது, நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை இந்த மோசமான வார்த்தைகள் எனக்கு மேலும் வலுவூட்டுவதாகவே இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

முகுல் சௌதரி தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட் அடித்ததும் ஆட்ட நாயகன் விருதை தந்தைக்கும் தோனிக்கும் சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Mukul Choudhary's father talking about the journey of his son

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.