லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் வீரர் முகுல் சௌதரி (21 வயது) பேட்டியின்போது தான் தினமும் 100 - 150 சிக்ஸர்கள் அடிப்பேன் எனக் கூறியுள்ளார்.
ஈடர்ன் கார்டன் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 16 ஓவர்களில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் ஆனதும் போட்டி முடிந்துவிட்டதென பலரும் நினைத்தார்கள். ஆனால், இளம் வீரர் முகுல் சௌதரி 27 பந்துகளில் 54 ரன்களை அடித்து நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த விருதுக்குப் பிறகு அவர் பேசியிருப்பதாவது:
இதை நான் எனது தந்தைக்குச் சமர்ப்பிகிறேன். அவர் என்னை கிரிக்கெட்டராக மாற்ற கனவு கண்டார். தோனி எனது கனவு நாயகன் என்பதால், இந்த விருதை அவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
நான் இயற்கையாகவே நல்ல உடல்வாகுவைப் பெற்றவன். எனது ஷாட்டில் நல்ல பலம் இருக்கும். இருந்தும் அதிகமாக பயிற்சி செய்வேன். ஒரு நாளைக்கு சுமார் 100 - 150 சிக்ஸர்கள் அடிப்பேன். கடைசி நான்கைந்து மாதங்களாக இந்த அளவுக்குப் பயிற்சி செய்தது எனக்கு பலன் கிடைத்துள்ளது.
ஹெலிகாப்டர் ஷாட்டை நான் சிறுவயதில் இருந்தே பயிற்சி செய்து வருகிறேன். தோன் யார்க்கர் பந்தையும் சிக்ஸர் அடிப்பார். அந்த மாதிரி பந்தை சிக்ஸர் அடித்தால் பந்துவீச்சாளர் வேறு பந்துக்கு முயற்சிப்பார் என்றார்.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வைபவ் அரோரா வீசிய பந்தில், முகுல் சௌதரி ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
Summary
Dhoni-inspired Mukul rises from '100-150 sixes' a day to IPL match-winner.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைபவ் சூர்யவன்ஷியின் தாரக மந்திரம் என்ன? ஆட்ட நாயகன் விருதுக்குப் பிறகு பேட்டி!

வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!








