மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி! அஸ்வின் பகிர்ந்த பதிவு!

முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வினின் பதிவு குறித்து...

News image

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடல். - படம்: எக்ஸ் / அஸ்வின்.

Updated On :3 ஏப்ரல் 2026, 7:42 am

முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி” எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 சீசனில் முதல்முறையாக சிஎஸ்கே அணி தனது சொந்த திடலில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக பேட்டிங் செய்து 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

தற்போது, இரண்டாவது போட்டியில் சொந்த மண்ணில் விளையாடும் சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி கடந்த சீசனில் மோசமாக பேட்டிங் செய்தது. பாதி சீசனுக்குப் பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டு ஓரளவுக்கு நிலைமை சரிசெய்யப்பட்டது. முதல் போட்டியில் மீண்டும் பழைய சீசன் போலவே பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

கடந்த போட்டியில் எம்.எஸ். தோனி, டெவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. தோனி 2 வாரங்கள் விளையாடமாட்டர் எனக் கூறப்பட்டது.

பிரெவிஸ் இந்தப் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. வலைப் பயிற்சியில் சிஎஸ்கே அணி மிகவும் நன்றாக விளையாடியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான அஸ்வின் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பதாகக் கூறியுள்ளார். இன்றைய போட்டியில் 200 ரன்கள் அடிக்குமென நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.

Summary

200 loading at the Chepauk! former csk Player Ashwin tweet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.