சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் அஸ்வின், “99 சதவிகித சிஎஸ்கேவின் வெற்றிகள் தோனி என்ற ஒற்றை மனிதரால் உருவானது” எனக் கூறியுள்ளார்.
சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி தனது மோசமான பந்துவீச்சினால் 210 ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியுற்றது.
சிஎஸ்கே அணி கடைசியாக 2023 சீசனில் ஐபிஎல் கோப்பை வென்றது. 2024 முதல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.
கடந்த 6 போட்டிகளில் ருத்ராஜ் தலைமையில் அனைத்திலுமே தோல்வியுற்றுள்ளது. இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் கூறியதாவது:
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் சிஎஸ்கேவின் 99 சதவிகித வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி என்ற ஒரு மனிதர் மட்டுமே. அவர் கேப்டனாக, ஆலோசகராக, பயிற்சியாளராக எல்லாவுமாக இருப்பார்.
மக்கள் எங்களை தந்தையர்களின் ராணுவம் (டேடிஸ் ஆர்மி) என கிண்டல் செய்தார்கள். இருந்தும் அவர்களை வைத்து ஐபிஎல் கோப்பையை வென்றவர். விமர்சகர்கள் என்ன கூறினாலும் அவர் வென்றுகொண்டே இருந்தார்.
ஐபிஎல் கோப்பைகளை அவர் மாதிரி வென்று பாராட்டுகளை நான் பார்த்ததில்லை. அதனால்தான் அவர் காலத்தின் தலைசிறந்த வீரராக இருக்கிறார் என்றார்.
சிஎஸ்கே அணியின் உடல்மொழியும், அணித் தேர்வும், கேப்டன், வீரர்களின் செயல்பாடுகளும் போட்டி மன்பான்மை இல்லாததாக இருப்பதை அஸ்வின் விமர்சித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Whether you accept it or not, 99% of CSK's success is down to one man MS Dhoni says Ashwin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



